About Us

Nagarathars also called as Nattukottai Chettiars hail from the Pandya Kingdom of Tamilnadu State, India. Nattukottai Chettiars arrived in Singapore during the early 1800s and settled down by doing Money lending business. At present, members of the 1000 odd Nattukottai Chettiar families in Singapore can be found in civil service, banking, educational institutions, Information Technology, Construction Industry and other professions.

Nagarathar Association (Singapore) is a registered society since 2003 in Singapore. Knowing the growing needs of a diverse community in the rapidly developing country, the Association was registered on 30th of May 2002 under the Societies act by the Registry of Societies, Singapore. The Association operates from 15 A, Tank Road, Singapore 238065.

The aim and objective of the association shall be follows.

  • - To Promote, foster and advance welfare, culture and customs of the members who belong to the Nagarathar Community also known as Nattukottai Chettiars residing in Singapore.
  • - To organise charitable activities for the underprivileged and poor, and to participate in activities at national level to promote the general well being of all communities  in Singapore.
  • - To organise cultural, educational, social and sporting activities for the members.
  • - To establish and maintain libraries, auditoriums and reading rooms.
  • - To establish educational scholarships for the members, their immediate families and for the Indian community in general.
  • - To encourage healthy exchange of ideas and experiences between the members and the Nattukkottai Chettiars worldwide.
  • - To organise conferences, talks and seminars for the benefit of the members with particular interest in promoting the members' healthy life style, cultural outlook and enhancing economic interests.
  • - To buy, lease, acquire, manage; mortgage, dispose, rent, hire both movable and immovable    properties in Singapore and elsewhere.
  • - To invest any funds of the association not immediately required for any of its immediate objective in such manner as may be determined from time to time.
  • - To Publish, print, broadcast or telecast information periodically for the benefit of the members subject to the approval of the relevant authorities and licensing bodies.  

Karpaga vinayagar

சிங்கப்பூர் நகரத்தார் சங்கம் - ஒரு அறிமுகம்

ஆயிரத்து எண்ணூறுகளின் (1800) முற்பகுதியில் கொண்டுவிற்க வந்த நகரத்தார்கள், குல வழக்கப்படி கிட்டங்கிகள் அமைத்து தொழில் செய்தனர். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் நமது முன்னோர்கள் ஆற்றிய பங்கு போற்றுதலுக்குரியது.


1859ல் தேங் ரோட்டில் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தையும், 1925ல் கியோங் செய்க் ரோட்டில் அருள்மிகு லயன் சித்தி விநாயகர் ஆலயத்தையும் நிறுவி தமிழும், சைவமும் வளரவும், சிங்கப்பூரில் இந்தியச் சமூகமும் நமது சமூகமும் வளர அறம் பல செய்து பெரும் தொண்டாற்றி வந்துள்ளார்கள்.


1940களின் பிற்பகுதியில் தங்களது குடும்பங்களை சிங்கப்பூருக்கு அழைத்து வந்து, தொழில்துறை மட்டுமன்றி கல்வி கேள்விகளில் நன்கு தேர்ச்சியுற்று பலதுறைகளிலும் தங்களது தடம் பதித்து புகழ்பெற்று விளங்குகின்றனர்.


“கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நகரத்தார்கள் 1980களில் தமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காத்து போற்ற “சிங்கப்பூர் நகரத்தார் மன்றம்” என்ற அமைப்பினை தோற்றுவித்தனர்.


அந்த அமைப்பே, 2003ஆம் ஆண்டு நகரத்தார் சங்கம் சிங்கப்பூர் (NAS) என்று சிங்கப்பூரில் பதிவு பெற்ற அமைப்பாக மாற்றம் கண்டது. சிங்கப்பூர் நகரத்தார் ஆலயங்களை நிர்வகிக்கும் செட்டியார் ஆலய குழுமம் (CTS), நகரத்தார் சங்கத்திற்கு என்று ஆலய வளாகத்திலேயே ஒரு அறையை தந்ததுடன், சங்கத்தின் விழாக்களுக்கும் நமது ஆலயங்களில் இருக்கும் மண்டபங்களை இலவசமாக கொடுத்து உதவுகிறார்கள். அதேபோல் நகரத்தார் சங்கமும் ஆலயத்தின் அனைத்து விழாக்களிலும் உதவி வருகிறது.


1940களில் 40-50 பேர்கொண்ட சிறிய சமூகமாக இருந்தவர்கள் இன்று 1000 உறுப்பினர்கள் பதிவு கொண்ட ஒரு பெரும் சமூகமாக சிங்கப்பூரில் திகழ்வது இறையருளே.


மேலும் மேலும் நமது குலம்தழைத்து அறம்பல செய்து நலமும், வளமும் பெற்று உயர அருள்மிகு லயன்சித்தி விநாயகரையும், அருள்மிகு தெண்டாயுதபாணியயையும் வணங்குகின்றோம்.

president Message

TEAM

Nagarathar culture

HISTORY OF NAGARATHARS

 Nattukottai Chettiars also called Nattukottai Nagarathars, are believed to have migrated to Kanchipuram during Kaliyuga era, year 204 and lived there for 2,108 years. Again no written record is available for this. They are said to have moved to Kaviripoom Pattinam, a coastal city and port also known as Poombugar, Capital of Chola Nadu, in Kaliyuga era, year 2312. They lived in Kaviripoom Pattinam for 1463 years until Kaliyuga era, year 3775.They were then known as Nattukottayars. Silapathigaram and Periyapuranam describe Kaviripoom Pattinam and bear testimony to the greatness of Nattukottayar community there. They are said to have traveled from Kaviripoom Pattinam to Melaka during Chola Dynasty as traders in Gem, Pearls, Silk and Spices. But available records indicate they traveled to Kandy, Colombo in 1805, Penang, Singapore 1824, Moulmein 1852, Rangoon 1854, Mandalay 1885 and later to Medan – Indonesia, Hochimin City (Saigon) Vietnam, Pnompen Cambodia, Vientiane Los, Southern Thailand, various States in Peninsular Malaysia, established money lending business and subsequently some of them settled there. It has been said that available records at Patharakudi madam, Thulavoor madam indicate the arrival of Nattukottayrs in Pandiya Nadu during Kaliyuga era, year 3808. They first settled in Ilayathankudi and were called Nagarathar as they had attained Thanavanigar status while at Poombugar. Nattukottayar are said to have lived in splendour at Kaviripoom Pattinam. While the King lived in the City in his castle (kottai), Nattukottayar lived in their countryside mansions (Kottai). Hence, ‘nattupurathil kottai katti valnthathal’ they were then called ‘Nattukottayar’. ‘Thanavanigar’ status attributes to their mercantile activities in Poombugar. Their principal obligation to the Royal family was to Crown the King during Coronation ceremony. King Poovandi Cholan’s misdeed caused 8,000 Thanavanigar families inclusive of women and all female children to perish in suicide to save their Honour, Reputation and Dignity. Only male children at Kurugulam (Community Boarding School) out of Town survived. After nine years (Kaliyuga era, year 3784) King Poovandi Cholan requested young Thanavanigars to crown his son Erajapooshna Cholan. They consented and to comply with tradition that only married person could perform crowning ceremony young Thanavanigars married ‘Vellalar’ community women. King Sounthara Pandiyan of Madurai Nagar wishing for good immigrants to dwell in his Kingdom, requested King Erajapooshana Cholan and in Kaliyuga era, year 3808, Thanvanigars migrated to Pandiya Nadu. They first settled in Ilayathankudi and were called ‘Nagarathars’. Ilayathankudiar retained Ilayathankudi Kovil. To the others, King Sounthara Pandiayan granted Mathoor Kovil, Vairavan Patti Kovil in Kaliyuga era, year 3813. Irraniyur Kovil, Pillayar Patti Kovil, Illuppakkudi Kovil in Kaliyuga era, year 3815. Soorakkudi Kovil and Velangudi Kovil in Kaliyuga era, year 3819. Note: Many Scholars opine; Thanvanigars migrated to Pandiya Nadu at the invitation of King Sounthara Pandiyan. Others say, the male children at ‘Kurugulam’ fled under the guidance of the Guru and sought refuge in Pandiya Nadu. Salvage operations going on at Poombugar site has unearthed some ancient Temples buried in the sea. Tamilnadu State Government announced their plan to excavate stone carvings at ancient Temple sites. We hope these would produce some source of information on early Nagarathar community in Poombugar. Temple inscriptions carved in stone, copper plates and ‘Olai Chuvadi’ (palm-leaf manuscripts) available in Madalayams and Libraries bear testimony to the aforesaid grants from King Sounthara Pandiyan. Subsequent British Administration is said to have authenticated referred grants and issued Document of Tile to the various Temples. (I have during my younger days seen the Title Deed signed by the then Governor of Madras Presidency, in respect of the 12 odd acres of land granted to Soorakkudi Kovil). Historians belive, when Thanavanigars arrived at Chola Nadu, King Manuneethi Cholan honoured them by granting ‘Singak kodi’ (Flag with Lion emblem/logotype) and decreed that they would be the Prinicpal Vaisigar and Maguda Vaisigar. He permitted them to inhabit in three streets at Kaviripoompattinam, excepting the North Street wherein other merchant community had already taken residence. Thanavanigar male children, 600 from West street, 400 from South street, 502 from East street, totaling 1,502 are believed to have left Kaviripoom Pattinam on the guidance of their guru. Upon arrival at Pandiya Nadu all of them settled at Ilayathankudi. When they attained marriageable age, they took Bride from ‘Arumbuhuthi Velalar’ community of ‘Pandukudi’ and ‘Thiruvetriyur’ origin. Their ‘Thirumangalyam’ was worn with, what was then known as ‘Arumbuk Kaluthooru’, is beign called the same to this day. Between 1300 and 1500 A. D. Mohamedan raid, conflicts between smaller principality, escalating civil disorder, robbery by Palayakkarars (Zamindars), burglary, in Pandiya Nadu caused the Nattukottai Nagarathars to burry their valuables including that of their Temples, Ahyembon Idols, Jewellery, ornaments, silver, copper, brass ware etc and moved out off the nine Temple area and settled in 96 adjoining villages. Thus, they were then called ‘Thonnutraru-oorar’. They dwelled in the 96 villages along with other communities.These villages were then classified into seven Vattahais or Pirivus (sub regions), called to this day, Pathinettur Melappattur Mela Vattahai Kila Vattahai Terku Vattahai Kilappattur Nindakarai Pirivu As of March 1953, they were reported to have domiciled around 80 + villages. In 1994 it was only 75 villages. Either they had moved out off their earlier place of domicile and migrated to other towns and cities or its entire residents abandoned the whole village itself and moved out. Nattukottai Nagarathars, who had moved into Nattarasankottai, have built their Nagaram on the same concept as our earlier settlement at Kaviripoom Pattinam. We find all the Kovils, Kulam, within a large square in the center of Nattarasankottai Nagar and Nagarathar dwellings around the square. Ilayathankudi Kovil comprises of seven groups namely, Okkurudayar Arumboorkilarana Pattana samiyar Perumaruthoorudayar Kalanivasarkudiyar Kinginikoorudayar Perasenthoorudayar Siru setroorudayar These seven groups, their two elder and younger brothers known as Thiruvetphoorudayar had lived together at Ilayathankudi. Some years later, elder brothers moved to Irraniyur Kovil and the younger to Pillayarpatti Kovil. Ilayathankudi Kovil Devasthanam had in the past established a maternity hospital cum infant care center and Elementary school. These were later handed over to Government. They have also provided piped water, lighting in the streets, set up botanical garden, Guesthouse and Post Office at Ilayathankudi. Sithar worshipped at Mathoor Kovil.His incantation of Aimbon, resulted in ainooru (five hundred) variations of the alloy. Hence, Mathoor Kovil samy is known by the name Ainootreesar. Vairavanpatti Kovil Nagarathar comprise of three pirivus namely, Peria vahuppu, Theivanayagar vahuppu Pillayar vahuppu with two sub pirivus, Kalanivasa ludayar and Maruthentirapura mudayar. All three are brothers. A Vinayagar, within the Kovil Valagham (compound) is the principal deity for Nagarathars in Pillayar vahuppu. The statue of Theivanayagar at Samy sannathi, is the ancestor of Nagarathars in Theivanayagar vahuppu. Some authors believe, Nagarathars in Periya vahuppu may have derived their Pirivu name by order of descent and being greater in number of Pullis. A 1926 archeology report No 3 mentions the discovery of stone carving dated; Rowthri varudam, Thai matham, Irandam thethi (1501 A.D) at Irraniyur Kovil. Inscription therein bear testimony to the granting of the site, south of Pathrakaliyamman Kovil, to a person known as Kalvasa nattil, Ilayathankudiyan Kulasegrpurathil Thiruvetpoorudayan. Residents of Irraniyur had freely given the site, as Thevi’s thanam to consecrate Amman deity. Subsequently, the ancient temple on the site was dismantled and Nagarathars built Irraniyur Kovil. Stone carvings around the four walls of Karpagraham at Irraniyur Kovil describe many honourable and charitable deeds of the highest order dating back to about 650 years. Chola King, Seyangonda Solan, consecrated Nemam Kovil. Hence, Nemam Kovil Samy is known by the name Seyangonda Solaysar. Soorkkudi Kovil Nagarathar are said to have found nine Idols made of Ahimbon that was buried deep, at the site of the present Temple, before it was built and first known Kumbabishegam held in 1898. It is believed, to avoid burglary by Theevetti kollai karan, probably Mohamedan invaders and Palayakkarars, (Zamindars) their ancestors may have buried these Idols. About thirty different communities in Tamilnadu have been identified to being called as “Chettiars”. We, the “Nattukkottai Nagarathar” otherwise commonly known, as “Nattukkottai Chettiar” community is one among them. The word “Chetti” affixed to our names in all documents in the past is still being followed to a lesser extent. Our ‘Isaikudimanam’ (marriage deed), ‘Pana Thiruppu’ (cash compliment at weddings), ‘Pulli panam’ at ‘Padappu’, ‘Thiruvathirai’, ‘Puthumai’, ‘Karthigai Soopidi’, weddings, ‘Pulli vari’ (religious tithes – to respective nine Nagara Kovils, native village/town Kovils administered by Nattukkotai Nagarathars, ‘Pulli’ register at Kovils, ‘Jathaham’ (horoscope), ‘Undiyal’ or ‘Hundi’ (Bill of exchange, promissory note) all bear the word “Chetti” affixed to our names. Some ‘Jathaham’ these days are found to have “Chettiar” affixed to the name of the father.

Chettiar

NAGARATHARS KOVIL

நகரக் கோவில்கள்

“நகரத்தார் பெருமக்கள் கோவிலைச் சார்ந்த குடிகள். குடிகள் சார்ந்த கோவிலை உடையவர்கள்” என்பார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். நகரத்தார் யாவரும் ஒன்பது கோவிலைச் சார்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. நம் நகரக் கோவில்களைப் பற்றிய சிறு குறிப்பைக் காண்போம்.

இளையாற்றங்குடி கோவில்

சுவாமி: கைலாச நாதர் அம்பாள்: நித்திய கல்யாணி நகரத்தார்களின் முதல் கோயில் இது. இக்கோயில் சிங்க வளநாடாகிய கல்வாச நாட்டில் இளையாற்றங்குடி-யான குலசேகரபுரம் உடையார் ஏழு வகைப் பிரிவினருக்கும் உரியது. பாண்டிய மன்னனால் கி.பி 707 இல் நகரத்தார்க்கு வழங்கப் பெற்றது. காரைக்குடியிலிருந்து கீழச்சிவல்பட்டி வழியாக 25 கி.மீ தொலைவில் உள்ளது. பிரிவுகள்: ஒக்கூருடையார், பட்டிணசாமியார், பெருமருதூருடையார், கழனிவாசக்குடியார், கிங்கிணிக் கூருடையார், பேரசெந்தூருடையார், சிறு சேத்தூருடையார் என ஏழு பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியே பிள்ளையார் கோவிலும் ஊருணியும் அமைத்துள்ளனர். பட்டணசாமியார் பிரிவினர் தனியே ஒரு சிவாலயமும் நகரவிடுதியும் கட்டியுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற திருமால் ஆலயம் ஒன்றைக் கழனிவாசல் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டியுள்ளார்கள்.

மாற்றூர் கோவில்

சுவாமி: ஐநூற்றீஸ்வரர்
அம்பாள்: பெரியநாயகி
கொங்கணச் சித்தர் இரச-வாதத்தால் உருவாக்கிய தங்கத்தின் மாற்று உரைத்துப் பார்த்த ஊர் என்பதால் மாற்றூர் என அழைக்கப்படுகிறது. கி.பி. 712இல் பாண்டிய மன்னனால் நகரத்தார்களுக்கு வழங்கப்பட்ட கோவில் இது. காரைக்குடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
இக்கோயிலைச் சார்ந்த நகரத்தார்கள் உறையூருடையார், அரும்பாக் கூருடையார், மணலூருடையார், மண்ணூருடையார், கண்ணூருடையார், கருப்பூருடையார், குளத்தூருடையார் என்ற 7 பிரிவுகளாக உள்ளனர். மூன்று கட்டுக்கள் உடைய பெரிய நகர விடுதி உள்ளது. ஊருணியின் வடகரையில் கலங்காத கண்ட விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரகாரத்தில் வரதராசப் பெருமாள், நிலமகள், திருமகளுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் சன்னதியும் அமைந்துள்ளது.

இலுப்பைக்குடி கோவில்

சுவாமி பெயர் : தான்தோன்றி ஈசர் அம்பாள் பெயர்: செளந்தர நாயகி காரைக்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். பாண்டிய மன்னரால் இக்கோவில் நிர்வாகம் நகரத்தார்களுக்கு கி.பி.714 இல் வழங்கப்பட்டது. திரிபுவன சக்கரவர்த்தியால் பிரதிட்டை செய்யப்பெற்ற கோவில் இது. தனபதி என்ற நகரத்தார் கனவில் சிவபெருமான் தோன்றி சூடாமணி ஒன்றை வழங்கி சிவபுண்ணியச் செயல்களை இத்தலத்தில் செய்து வருமாறு கட்டளை இட்டதாக “இலுப்பைக்குடி புராணம்” கூறுகிறது. பிரம்மர், திருமால், இந்திரன் ஆகியோரின் விண்ணப்பத்தை ஏற்று சிவபெருமான் வைரவக்கோலம் பூண்டு கும்பாண்டகன் என்ற அசுரனை அழித்து இங்கே எழுந்தருளியுள்ளார். நகரத்தார் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் இது ஒன்றே. சித்ரா பெளர்ணமிக்கு பத்து நாள் முன்பு திருவிழா தொடங்கி பெளர்ணமி அன்று திருவிழா நிறைவு பெறும். இக்கோவில் நகரத்தார் சூடாமணிபுரமுடையார் எனப்படுகின்றனர்.

பிள்ளையார்பட்டி கோவில்

சுவாமி பெயர் : திருவீசர், மருதீசர் அம்பாள் பெயர்: சிவகாமவல்லி, வாடாமலர் மங்கை காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக 14 கி.மீ தொலைவில் உள்ள குடைவரைக் கோவில் பிள்ளையார்பட்டி. குடைவரைக் கோவிலை இணைத்து நகரத்தார் கற்றளித் திருப்பணி செய்து இரு கோயில்களையும் இணைத்தமையால் இங்கு இரு இறைவரும், இரு இறைவியும் இருந்து அருள் வழங்குகின்றனர். இக்கோவில் நந்திராசனால் பிரதிட்டை செய்யப்பெற்றது. 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனிடமிருந்து திருவேட்பூருடையார் என்ற சகோதரர்களில் இளைய சகோதரர் இக்கோயிலை இளையாற்றங்குடியிலிருந்து பிரித்து வந்து தங்களுக்குரிய தனிக் கோவிலாக்கிக் கொண்டனர். இக்கோவில் நகரத்தார் திருவேட்பூருடையார் என்ற பிரிவைச் சார்ந்தவர்கள். இன்றும் இக்கோவிலைச் சார்ந்த நகரத்தார் முதலில் இங்கு திருமணத்திற்குப் பாக்கு வைத்து, பின் இளையாற்றங்குடியிலும் பாக்கு வைத்து கோவில் மாலை பெற்றுக் கொள்கிறார்கள். உலகம் போற்றும் கற்பக விநாயகர் இக்கோவிலில், இரண்டு திருக்கரங்கள் கொண்டு வலம்புரி விநாயகராக வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். மேலும் இவர் தனது வலக் கையில் சிவலிங்கத்தை ஏந்தி பூசை செய்யும் அமைப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பம்சம். இங்கு பத்து நாள் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. நகரத்தார்கள் வசதிக்காக இங்கு நகரவிடுதி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

வைரவன் கோவில்

சுவாமி பெயர்: வளரொளி நாதர் அம்பாள் பெயர்: வடிவுடையம்மை காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக 15 கி.மீ. தோலைவில் வைரவன் பட்டி உள்ளது. இக்கோயில் வளவேந்திர ராசனால் பிரதிட்சை செய்யப்பெற்றது. கி.பி. 712 இல் பாண்டிய மன்னரிடமிருந்து இக்கோயிலை நகரத்தார் பெற்றனர். அரக்கர்களால் ஏற்பட்ட துன்பத்திலிருந்ந்து தேவர்களை மீட்க , சிவபெருமான் வைரவர் கோலம் பூண்டு கற்பக விநாயகர் தலைமையில் அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். நான் மறைகளே நாய் வடிவுடன் வைரவருக்கு வாகனமாக விளங்குவதாகக் கூறுவர். நகரத்தார்கள் பெரிய வகுப்பு, தெய்யனார் வகுப்புப், பிள்ளையார் என மூன்று பிரிவுகளை சார்ந்தவர்களாவர். இவர்கள் பிரிவு மாற்றித் திருமணம் செய்யும் வழக்கமில்லை. “வைரவர் கோயில் புராணம்” இத்தலத்தின் பெருமையை எடுத்துக் கூறுகிறது. இதனை 37 ஓவியங்களாக மேற்கூரையில் தீட்டி உள்ளனர். இராமாயணக் காட்சிகள் 43 ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இங்கு நகர விடுதி உள்ளது. நகரத்தாருக்கு மட்டுமே உரிய பிள்ளையார் நோன்பு விழா மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது. 2017 ஆம் வருடம் முதல் இக்கோவிலில் கொலு வைத்து நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மேலும் இக்கோயிலில் ஒரே கல்ல்லினால் ஆன சண்டீகேசுவர் கோபுரம் உள்ளது. இத்தலத்தின் தலவிருட்சம் ஏறழிஞ்சி மரம். இதன் கற்சிற்பம் இங்கு வழிபாட்டில் உள்ளது. நடராசர் சன்னதியில் காணப்படும் இரண்டு குதிரை வீரர் சிற்பங்களும், கண்ணப்ப நாயனார் சிற்பமும் சிறப்பானது.

நேமம் கோவில்

சுவாமி பெயர்: செயங்கொண்ட சோழிசர் அம்பாள் பெயர்: செளந்தர நாயகி காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக 12 கி.மீ தொலைவில் நேமம் கோவில் உள்ளது. நேமராசனால் இக்கோயில் பிரதிட்சை செய்யப் பெற்றது. கி.பி. 714 இல் செளந்தர பாண்டியனால் இக்கோயில் நகரத்தாருக்கு வழங்கப்பெற்றது. செட்டிநாட்டுப் பகுதியில் கிடைக்காதகிய அறிய வெள்ளைக் கற்களைத் தருவித்து இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. பேசும் சித்திரங்களாகச் சிலைகள் அமைந்துள்ளன. இக்கோயில் நகரத்தார் இளநலமுடையார் பிரிவைச் சார்ந்தவர்கள். இங்கு நகர விடுதி உள்ளது. இங்கு இரண்டு அம்மன்கள் உள்ளன(திரு உருவங்கள்). திருமதிலின் பின்புறத்தில் சக்தி பீடவடிவில் நேமங்காளி இருக்கின்றாள். செயங்கொண்ட சோழீசர் கிழக்கு பார்க்க, செளந்தர நாயகி தெற்குப் பார்க்க , நேமங்காளியின் உக்கிரத்தை தணிக்க வைரவை மேற்குப் பார்க்க, இவ்வூர் காவல் தெய்வமான நாச்சியார் அம்மன் வடக்கு பார்க்க, அனைத்து திசைகளையும் காப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.

சூரக்குடி கோவில்

சுவாமி பெயர்: தேசிக நாதர்
அம்பாள் பெயர்: ஆவுடைய நாயகி
ரைக்குடியில் கழனிவாசல் வழியாக காணடுகாத்தான் சாலையில் 10 கி.மீ தொலைவில் சூரக்குடி கோவில் உள்ளது. கி.பி. 718 இல் இக்கோயில் நகரத்தாருக்கு வழங்கப்பெற்றது. இவர்கள் புகழ் வேண்டிய பாக்கமுடையார் பிரிவைச் சார்ந்தவர்கள். இங்கு வைரவர் வழிபாடு மிகவும் விஷேசம். தேய்பிறை அஷ்டமியில் வைரவர் வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
மதுரை மீனாட்சிக்கு அமைந்தது போல, இங்கு அம்மன் நான்கு , திருக்கரங்களுடன், மூன்று கண்களுடனும் காட்சி தந்து அருள் பாழிக்கிறாள். தெட்சினாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனித்தனியே தோன்றும் வண்ணம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இங்கு நகர விடுதி உள்ளது. 2017 ஆம் வருடம் முதல் இக்கோவிலில் கொலு வைத்து நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இரணியூர் கோவில்

சுவாமி பெயர்: ஆட்கொண்ட நாதர்
அம்பாள் பெயர்: சிவபுரந்தேவி
காரைக்குடியில் இருந்து தமக்குரிய தனிக் கோவிலாக்கிக் கொண்டனர். இளைய சகோதரர் வழியினர் பிள்ளையார்பட்டி கோவிலைத் தமக்குரியதாக்கிக் கொண்டதால், இவ்விரு கீழச்சிவல்பட்டி வழியாக 24 கீ.மீ தொலைவில் இரணியூர் உள்ளது. கி.பி 714 இல் காருண்ய பாண்டிய அரசனால் இக்கோவில் பிரதிட்டை செய்யப் பெற்றது. இளையாற்றங்குடி கோவிலைச் சார்ந்த திருவேட்பூருடையாரில் மூத்த சகோதர வழியினர் இரணியூர் கோவிலைத் கோவிலாரும் அண்ணன்-தம்பி முறையாயினர். அதனால் இவ்விரு கோவிலாரும் இளையாற்றங்குடியில் பாக்கு வைத்து திருமணமாலை பெற்றுக் கொள்கின்றனர்.
இரணியனைக் கொன்ற பாவம் நீங்க நரசிங்க பெருமாள் வழிபட்ட தலம் இது எனக் கூறுவர். இக்கோவிலை “செட்டிநாட்டின் சிற்பக் களஞ்சியம்” என அழைக்கும் அளவிற்கு இக்கோவிலில் சிற்பவேலைபாடுகள் மனதை கவரும் வகையில் அமைந்திருக்கும்.
இங்கு அட்ட லெட்சுமிமண்டபம் உள்ளது. இக்கோவிலில் கோட்டச் சிலைகள் ஐம்பொன் சிற்பங்களாகும் நான்கு கரத்துடன் உள்ள முத்து கந்தர் சிலையும், அவருடன் உலாவரும் வீரபாகு சிலையும் இக்கோவிலில் மட்டுமே கண்டு வழிபட முடியும். இவர் திருக்கார்த்திகை திருநாளில் திருவீதி உலா வருவார்.
இக்கோவிலைச் சார்ந்த நகரத்தார்கள் திருவேட்பூருடையார் பிரிவைச் சார்ந்தவர்கள்.

வேலங்குடிக் கோவில்

சுவாமி பெயர்: கண்டீசுவரர்
அம்பாள் பெயர்: காமாட்சியம்மை
காரைகுடியிலிருந்து பள்ளத்துதூர் செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் வேலங்குடி உள்ளது.கி.பி.718 இல் பாண்டிய மன்னனால் இக்கோவில் நகரத்தார்களுக்கு கொடுக்கபட்டது. நகரத்தார் கோவில்களில் புள்ளிகளில் மிகக் குறைவாய் உள்ள கோவில் இது.
இக்கோவிலலைச் சார்ந்த நகரத்தார்கள் கழனி நல்லூகுடையார் பிரிவைச் சார்ந்தவர்கள்.

NAGARATHAR TOWNS

This is a standard alert.

I'm a cool paragraph that lives inside of an even cooler modal. Wins!

This is a standard alert.

I'm a cool paragraph that lives inside of an even cooler modal. Wins!

Alert

Are you sure want to delete 30 messages permanently ?

Donation

Please enter donation amount Please enter minimum amount
Please enter your comment

Title

We will send you a confirmation email with the user ID and Password Details to the registered email ID.

Thank You

Are you sure?

Do you really want to delete this member?

Are you sure?

Do you really want to delete this Participant?

Are you sure?

Do you really want to delete this message?

Message

Are you sure, you want to logout?

Paynow QR Code

Scan pay now QR code and pay

Scan QR code

If your using desktop use your bank app to scan the QR code