நகரக் கோவில்கள்

“நகரத்தார் பெருமக்கள் கோவிலைச் சார்ந்த குடிகள். குடிகள் சார்ந்த கோவிலை உடையவர்கள்” என்பார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். நகரத்தார் யாவரும் ஒன்பது கோவிலைச் சார்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. நம் நகரக் கோவில்களைப் பற்றிய சிறு குறிப்பைக் காண்போம்.

1. இளையாற்றங்குடி கோவில்
சுவாமி: கைலாச நாதர்
அம்பாள்: நித்திய கல்யாணி

நகரத்தார்களின் முதல் கோயில் இது. இக்கோயில் சிங்க வளநாடாகிய கல்வாச நாட்டில் இளையாற்றங்குடி-யான குலசேகரபுரம் உடையார் ஏழு வகைப் பிரிவினருக்கும் உரியது. பாண்டிய மன்னனால் கி.பி 707 இல் நகரத்தார்க்கு வழங்கப் பெற்றது. காரைக்குடியிலிருந்து கீழச்சிவல்பட்டி வழியாக 25 கி.மீ தொலைவில் உள்ளது.

பிரிவுகள்: ஒக்கூருடையார், பட்டிணசாமியார், பெருமருதூருடையார், கழனிவாசக்குடியார், கிங்கிணிக் கூருடையார், பேரசெந்தூருடையார், சிறு சேத்தூருடையார் என ஏழு பிரிவுகளைக் கொண்டது.

ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியே பிள்ளையார் கோவிலும் ஊருணியும் அமைத்துள்ளனர். பட்டணசாமியார் பிரிவினர் தனியே ஒரு சிவாலயமும் நகரவிடுதியும் கட்டியுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற திருமால் ஆலயம் ஒன்றைக் கழனிவாசல் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டியுள்ளார்கள்.
2. மாற்றூர் கோவில்
சுவாமி: ஐநூற்றீஸ்வரர்
அம்பாள்: பெரியநாயகி

கொங்கணச் சித்தர் இரச-வாதத்தால் உருவாக்கிய தங்கத்தின் மாற்று உரைத்துப் பார்த்த ஊர் என்பதால் மாற்றூர் என அழைக்கப்படுகிறது. கி.பி. 712இல் பாண்டிய மன்னனால் நகரத்தார்களுக்கு வழங்கப்பட்ட கோவில் இது. காரைக்குடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

இக்கோயிலைச் சார்ந்த நகரத்தார்கள் உறையூருடையார், அரும்பாக் கூருடையார், மணலூருடையார், மண்ணூருடையார், கண்ணூருடையார், கருப்பூருடையார், குளத்தூருடையார் என்ற  7 பிரிவுகளாக உள்ளனர்.
மூன்று கட்டுக்கள் உடைய பெரிய நகர விடுதி உள்ளது. ஊருணியின் வடகரையில் கலங்காத கண்ட விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரகாரத்தில் வரதராசப் பெருமாள், நிலமகள், திருமகளுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் சன்னதியும் அமைந்துள்ளது.
3. இலுப்பைக்குடி கோவில்
சுவாமி பெயர் : தான்தோன்றி  ஈசர்
அம்பாள் பெயர்: செளந்தர நாயகி

காரைக்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். பாண்டிய மன்னரால் இக்கோவில் நிர்வாகம் நகரத்தார்களுக்கு கி.பி.714 இல் வழங்கப்பட்டது.

திரிபுவன சக்கரவர்த்தியால் பிரதிட்டை செய்யப்பெற்ற கோவில் இது. தனபதி என்ற நகரத்தார் கனவில் சிவபெருமான் தோன்றி சூடாமணி ஒன்றை வழங்கி சிவபுண்ணியச் செயல்களை இத்தலத்தில் செய்து வருமாறு கட்டளை இட்டதாக “இலுப்பைக்குடி புராணம்” கூறுகிறது. பிரம்மர், திருமால், இந்திரன் ஆகியோரின் விண்ணப்பத்தை ஏற்று சிவபெருமான் வைரவக்கோலம் பூண்டு கும்பாண்டகன் என்ற அசுரனை அழித்து இங்கே எழுந்தருளியுள்ளார்.

நகரத்தார் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் இது ஒன்றே. சித்ரா பெளர்ணமிக்கு பத்து நாள் முன்பு திருவிழா  தொடங்கி பெளர்ணமி அன்று திருவிழா நிறைவு பெறும்.

இக்கோவில் நகரத்தார் சூடாமணிபுரமுடையார் எனப்படுகின்றனர்.
 
4. பிள்ளையார்பட்டி கோவில்
சுவாமி பெயர் : திருவீசர், மருதீசர்
அம்பாள் பெயர்: சிவகாமவல்லி, வாடாமலர் மங்கை

காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக 14 கி.மீ தொலைவில் உள்ள குடைவரைக் கோவில் பிள்ளையார்பட்டி.
குடைவரைக் கோவிலை இணைத்து நகரத்தார் கற்றளித் திருப்பணி செய்து இரு கோயில்களையும் இணைத்தமையால் இங்கு இரு இறைவரும், இரு இறைவியும் இருந்து அருள் வழங்குகின்றனர். இக்கோவில் நந்திராசனால் பிரதிட்டை செய்யப்பெற்றது. 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனிடமிருந்து  திருவேட்பூருடையார் என்ற சகோதரர்களில் இளைய சகோதரர்  இக்கோயிலை இளையாற்றங்குடியிலிருந்து பிரித்து வந்து  தங்களுக்குரிய தனிக் கோவிலாக்கிக் கொண்டனர்.

இக்கோவில் நகரத்தார் திருவேட்பூருடையார் என்ற பிரிவைச் சார்ந்தவர்கள். இன்றும் இக்கோவிலைச் சார்ந்த நகரத்தார் முதலில் இங்கு திருமணத்திற்குப் பாக்கு வைத்து, பின் இளையாற்றங்குடியிலும் பாக்கு வைத்து கோவில் மாலை பெற்றுக் கொள்கிறார்கள்.

உலகம் போற்றும் கற்பக விநாயகர் இக்கோவிலில், இரண்டு திருக்கரங்கள் கொண்டு வலம்புரி விநாயகராக வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். மேலும் இவர் தனது வலக் கையில் சிவலிங்கத்தை ஏந்தி பூசை செய்யும் அமைப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பம்சம். இங்கு பத்து நாள் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. நகரத்தார்கள் வசதிக்காக இங்கு நகரவிடுதி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
5. வைரவன் கோவில்
சுவாமி பெயர்: வளரொளி நாதர்
அம்பாள் பெயர்: வடிவுடையம்மை

காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக 15 கி.மீ. தோலைவில் வைரவன் பட்டி உள்ளது. இக்கோயில் வளவேந்திர ராசனால் பிரதிட்சை செய்யப்பெற்றது. கி.பி. 712 இல் பாண்டிய மன்னரிடமிருந்து இக்கோயிலை நகரத்தார் பெற்றனர்.

அரக்கர்களால் ஏற்பட்ட துன்பத்திலிருந்ந்து தேவர்களை மீட்க , சிவபெருமான் வைரவர் கோலம் பூண்டு கற்பக விநாயகர் தலைமையில் அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். நான் மறைகளே நாய் வடிவுடன் வைரவருக்கு வாகனமாக விளங்குவதாகக் கூறுவர்.
நகரத்தார்கள் பெரிய வகுப்பு, தெய்யனார் வகுப்புப், பிள்ளையார் என மூன்று பிரிவுகளை சார்ந்தவர்களாவர். இவர்கள் பிரிவு மாற்றித் திருமணம் செய்யும் வழக்கமில்லை. “வைரவர் கோயில் புராணம்” இத்தலத்தின் பெருமையை எடுத்துக் கூறுகிறது. இதனை 37 ஓவியங்களாக மேற்கூரையில் தீட்டி உள்ளனர். இராமாயணக் காட்சிகள் 43 ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இங்கு நகர விடுதி உள்ளது. நகரத்தாருக்கு மட்டுமே உரிய பிள்ளையார் நோன்பு விழா மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது. 2017 ஆம் வருடம் முதல் இக்கோவிலில் கொலு வைத்து நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுகிறார்கள்
மேலும் இக்கோயிலில் ஒரே கல்ல்லினால் ஆன சண்டீகேசுவர் கோபுரம் உள்ளது. இத்தலத்தின் தலவிருட்சம் ஏறழிஞ்சி மரம். இதன் கற்சிற்பம் இங்கு வழிபாட்டில் உள்ளது. நடராசர் சன்னதியில் காணப்படும் இரண்டு குதிரை வீரர் சிற்பங்களும், கண்ணப்ப நாயனார் சிற்பமும் சிறப்பானது.
6. நேமம் கோவில்
சுவாமி பெயர்: செயங்கொண்ட சோழிசர்
அம்பாள் பெயர்: செளந்தர நாயகி

காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக 12 கி.மீ தொலைவில் நேமம் கோவில் உள்ளது. நேமராசனால் இக்கோயில் பிரதிட்சை செய்யப் பெற்றது. கி.பி. 714 இல் செளந்தர பாண்டியனால் இக்கோயில் நகரத்தாருக்கு வழங்கப்பெற்றது. செட்டிநாட்டுப் பகுதியில் கிடைக்காதகிய அறிய வெள்ளைக் கற்களைத் தருவித்து இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. பேசும் சித்திரங்களாகச் சிலைகள் அமைந்துள்ளன.

இக்கோயில் நகரத்தார் இளநலமுடையார் பிரிவைச் சார்ந்தவர்கள். இங்கு நகர விடுதி உள்ளது. இங்கு இரண்டு அம்மன்கள் உள்ளன(திரு உருவங்கள்). திருமதிலின் பின்புறத்தில் சக்தி பீடவடிவில் நேமங்காளி இருக்கின்றாள்.
செயங்கொண்ட சோழீசர் கிழக்கு பார்க்க, செளந்தர நாயகி தெற்குப் பார்க்க , நேமங்காளியின் உக்கிரத்தை தணிக்க வைரவை மேற்குப் பார்க்க, இவ்வூர் காவல் தெய்வமான நாச்சியார் அம்மன் வடக்கு பார்க்க, அனைத்து திசைகளையும் காப்பது  இக்கோயிலின் தனிச் சிறப்பு.
7. சூரக்குடி கோவில்
சுவாமி பெயர்: தேசிக நாதர்
அம்பாள் பெயர்: ஆவுடைய நாயகி

ரைக்குடியில் கழனிவாசல் வழியாக காணடுகாத்தான் சாலையில் 10 கி.மீ தொலைவில் சூரக்குடி கோவில் உள்ளது. கி.பி. 718 இல் இக்கோயில் நகரத்தாருக்கு வழங்கப்பெற்றது. இவர்கள் புகழ் வேண்டிய பாக்கமுடையார் பிரிவைச் சார்ந்தவர்கள். இங்கு வைரவர் வழிபாடு மிகவும் விஷேசம். தேய்பிறை அஷ்டமியில் வைரவர் வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
மதுரை மீனாட்சிக்கு அமைந்தது போல, இங்கு அம்மன் நான்கு , திருக்கரங்களுடன், மூன்று கண்களுடனும் காட்சி தந்து அருள் பாழிக்கிறாள். தெட்சினாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனித்தனியே தோன்றும் வண்ணம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இங்கு நகர விடுதி உள்ளது.  2017 ஆம் வருடம் முதல் இக்கோவிலில் கொலு வைத்து நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
8. இரணியூர் கோவில்
சுவாமி பெயர்: ஆட்கொண்ட நாதர்
அம்பாள் பெயர்: சிவபுரந்தேவி

காரைக்குடியில் இருந்து தமக்குரிய தனிக் கோவிலாக்கிக் கொண்டனர். இளைய சகோதரர் வழியினர் பிள்ளையார்பட்டி கோவிலைத் தமக்குரியதாக்கிக் கொண்டதால், இவ்விரு கீழச்சிவல்பட்டி வழியாக 24 கீ.மீ தொலைவில் இரணியூர் உள்ளது. கி.பி 714 இல் காருண்ய பாண்டிய அரசனால் இக்கோவில் பிரதிட்டை செய்யப் பெற்றது. இளையாற்றங்குடி கோவிலைச் சார்ந்த திருவேட்பூருடையாரில் மூத்த சகோதர வழியினர் இரணியூர் கோவிலைத் கோவிலாரும் அண்ணன்-தம்பி முறையாயினர். அதனால் இவ்விரு கோவிலாரும்  இளையாற்றங்குடியில் பாக்கு வைத்து திருமணமாலை பெற்றுக் கொள்கின்றனர்.


இரணியனைக் கொன்ற பாவம் நீங்க நரசிங்க பெருமாள் வழிபட்ட தலம் இது எனக் கூறுவர். இக்கோவிலை “செட்டிநாட்டின் சிற்பக் களஞ்சியம்” என அழைக்கும் அளவிற்கு இக்கோவிலில் சிற்பவேலைபாடுகள் மனதை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

இங்கு அட்ட லெட்சுமிமண்டபம் உள்ளது. இக்கோவிலில் கோட்டச் சிலைகள் ஐம்பொன் சிற்பங்களாகும் நான்கு கரத்துடன் உள்ள முத்து கந்தர் சிலையும், அவருடன் உலாவரும் வீரபாகு சிலையும் இக்கோவிலில் மட்டுமே கண்டு வழிபட முடியும். இவர் திருக்கார்த்திகை திருநாளில் திருவீதி உலா வருவார்.

இக்கோவிலைச் சார்ந்த நகரத்தார்கள் திருவேட்பூருடையார் பிரிவைச் சார்ந்தவர்கள்.
9. வேலங்குடிக் கோவில்
சுவாமி பெயர்:கண்டீசுவரர்
அம்பாள் பெயர்:காமாட்சியம்மை
காரைகுடியிலிருந்து  பள்ளத்துதூர் செல்லும்  வழியில் 9 கி.மீ தொலைவில் வேலங்குடி உள்ளது.கி.பி.718 இல் பாண்டிய மன்னனால் இக்கோவில் நகரத்தார்களுக்கு கொடுக்கபட்டது. நகரத்தார் கோவில்களில் புள்ளிகளில் மிகக் குறைவாய் உள்ள கோவில் இது.
இக்கோவிலலைச் சார்ந்த நகரத்தார்கள் கழனி நல்லூகுடையார் பிரிவைச் சார்ந்தவர்கள்.