தைப்பூசம், மகமை எழுதுதல்

அன்புள்ள நகரத்தார்களுக்கு,

வணக்கம்.

தைப்பூச தினத்தன்று ஆலயத்தின் இணைப்பு கட்டிட மூன்றவாது தளத்தின் நகரத்தார் சங்கத்தின் எதிர் (STEC Computer Center) அறையில் மகமை எழுதப்படும். அத்துடன் வருடாந்திர சங்க உறுப்பினர் சந்தாவையும் மற்றும் செட்டியார் ஆலய குழும (CTS உறுப்பினர்) சந்தாவையும் நீங்கள் செலுத்தலாம்.

சிங்கப்பூருக்கு புதிதாகப் பணியாற்ற வந்திருக்கும் உங்கள் நகரத்தார் நண்பர்களையும் உறவுகளையும் நம் சங்க உறுப்பினர்களாக சேர ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினத்தில் புதிய உறுப்பினர் படிவங்களைப் பூர்த்தி செய்து உறுப்பினர்களாகலாம்.

நாள்: 21/1/2019 நேரம்:காலை 08:00 மணி முதல் மாலை 08:00 மணிவரை.

மகமையின் சிறப்பு: நாம் ஏன் மகமை எழுதவேண்டும்?

மகமை எழுதுதல் என்பது நாம் தொன்றுதொட்டே செய்து வரும் வழக்கமாகும். நம் நகரத்தார்கள் வழிவழியாக தங்கள் வருமானத்தின் ஒரு பங்கை தானதர்மத்திற்கும் அன்னதானத்திற்கும் ஆலயப் பணிகளுக்கும் செலவிட்டு வந்தனர். அந்த வழக்கப்படி நாம் ஒவ்வொருவரும் நம் வருமானத்தில் ஒரு தொகையை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி நமது சந்ததிகள் பெருகுவதற்கும் தொழிலில் அபிவிருத்தி அடைவதற்கும் மகமை எழுதி வருகிறோம்.

மகன் + உரிமை என்ற இருசொற்களின் திரிந்த வடிவமே மகமை என்றாயிற்று என்பர். அதற்கு மகனுக்குரிய உரிமை என்று பொருள். அதாவது செட்டிமகனாம் முருகனுக்குரிய பங்கைச் செலுத்துவதாகும். அன்னவன் கோவிலுக்கு கொடுக்கக் கொடுக்க எல்லா செல்வங்களும் பல்கிப் பெருகும் என்பது நாமறிந்த உண்மை. ஆதலால் வருடா வருடம் முந்தய வருடத்தில் செலுத்தியதை விட விருப்பத்திற்க்கேற்ப கூடுதலாய் எழுதுதலும் நம் மரபாகும். ஆகவே மகமை எழுதுவது நம் அனைவரின் முக்கியக் கடமை என்பதை மனதிற்கொண்டு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது அன்றைய தினம் மகமை எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கட்டண விபரம்:

மகமை                                :           விருப்பம் போல். (குறைந்தது $11)

காவடிக்காணிக்கை     :           குடும்பம் ஒன்றுக்கு $1.50 வீதம்.

இலைக் காணிக்கை     :           பெரியவருக்கு $1.50 வீதம்;

குழந்தைகளுக்கு $0.50 வீதம்.

செட்டியார் ஆலய குழும (CTS உறுப்பினர்) சந்தா விபரம்:

வருடாந்திர சந்தா: $12.85

 

நகரத்தார் சங்க வருடாந்திர சந்தா விபரம்:

வருடாந்திர சந்தா: $15.00 (வருடாந்திர உறுப்பினர்களுக்கு மட்டும்)

நகரத்தார் சங்கம் புதிய உறுப்பினர்கள் சந்தா விபரம்:

முதலாண்டு சந்தா: $15.00 + பதிவுக் கட்டணம் $5.00     ஆக $20.00 (அல்லது)

ஆயுள் சந்தா: $200.00 + பதிவுக் கட்டணம் $5.00 ஆக $205.00.

 

இப்படிக்கு,

நகரத்தார் சங்கம், சிங்கப்பூர்.